சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் : பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தல்

திருப்பூர் : கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூரில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் : கேரள அரசு சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திருப்பூரில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி வலியுறுத்தியுள்ளார்.



பாட்டாளி மக்கள் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவினாசி மற்றும் பல்லடம் தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நடந்தது. 

இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- உயர்மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்கள் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இதில், விவசாயிகளை அடித்து மிரட்டி நிலத்தைக் கையகப்படுத்துகின்றனர். திட்டத்தை நெடுஞ்சாலை ஓரங்களில் கேபிள் வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 



விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதற்கு எதிராக விவசாயிகளின் போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவளிக்கும். கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய நீர்வளத்துறை அளித்துள்ள அனுமதியினை திரும்பப் பெற வேண்டும். திருப்பூர் உள்ளிட்ட மாநகராட்சிகளில் உயர்த்தப்பட்டுள்ள குடிநீர் கட்டணம், வீட்டு வரி தொழில்வரி ஆகியவற்றினால் பொதுமக்கள் மிகவும் சிரமமடைந்துள்ளனர். மாநில அரசு அதனை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தண்ணீர் பஞ்சம் உள்ள நிலையில், நிலுவையில் உள்ள 20 பாசனத்திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதப்படுத்துகின்றனர். அதனை நிறைவேற்றினால் தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறை தீரும். 

கோவை சிறுவாணி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதற்கு காரணம் கேரள அரசு தொடர்ந்து தடுப்பணை கட்டி வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...