கோவை : 2 பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு தலைமறைவாக இருந்த தந்தையை போலீசார் நேற்று இரவு கைது செய்ததை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில் குழந்தைகளை கொன்ற தந்தை பத்மநாபன் போலீசாரிடம் கூறிய வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது :
எனது மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நான் மது போதைக்கு அடிமையானேன். இப்படி தினமும் மது குடித்து வரும்போதெல்லாம் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. இதை தொடர்ந்து நான் வாழ்க்கையில் வெறுப்படைந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். இதனை மனைவி கண்டித்தார். மீண்டும் தகராறு ஏற்பட்டு என் மனைவி அவரது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் வெறுப்படைந்த நான் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். பிறகு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் குழந்தைகளை கொன்ற பின்பு என் மனம் தற்கொலை செய்துகொள்வதை ஏற்கவில்லை. இதனால் நான் தற்கொலை செய்யும் முடிவை கைவிட்டேன். பின்னர் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகும் முயற்சியில் சுற்றும்போது போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்றார்.