நீலகிரி : குன்னூர் அருகே உள்ள டால்பினோஸ் பகுதியில் வீட்டில் வளர்க்கும் பசு மாட்டுடன் காட்டெருமை உலா வருவது பொதுமக்களை உள்ளவர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

குன்னூர் பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட்டுகளில் நூற்றுக்கணக்கான காட்டெருமைகள் நடமாட்டம் காணப்படுவது வழக்கம். இவை அவ்வப்போது இந்த எஸ்டேட்டுகளில் பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களையும், இப்பகுதியில் உலா வரும் மற்ற நாய், ஆடு உள்ளிட்ட விலங்கினங்களையும் தாக்குவது வழக்கம்.
இந்த நிலையில், குன்னூர் அருகே உள்ள டால்பின்நோஸ் சுற்றுலா தளத்திற்கு செல்லும் வழியில் வீட்டில் வளர்க்கும் பசுமாட்டுடன், காட்டெருமையும் இன்று ஒன்றாக வீதியில் உலா வந்தது காண்போரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இருப்பினும், அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த காட்டெருமையை அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் துரத்த வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.