கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானைக் கூட்டம் : பொதுமக்கள் பீதி

கோவை : கோவையில் சோமையம்பாளையம் பகுதியில், திடீரென 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை : கோவையில் சோமையம்பாளையம் பகுதியில், திடீரென 12 காட்டு யானைகள் கூட்டமாக ஊருக்குள் நுழைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவையில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரகிராமங்களில் இரவு நேரங்களில் உணவு, தண்ணீர் தேடி காட்டு யானைகள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இந்நிலையில், சோமையம்பாளையம் பகுதியில் 12 காட்டு யானைகள் கூட்டமாக நேற்றிரவு நுழைந்தன. குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த யானைகள், கூட்டங்கூட்டமாக உலா வருவதைக் கண்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.



இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்து காட்டிற்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர். இம்முயற்சியினால், யானைக்கூட்டம் குடியிருப்பு பகுதிகளைக் கடந்து ஒரு முட்காட்டில் பதுங்கி நிற்க, அவற்றை அப்புறப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, தூடியலூர் அருகே அப்பநாய்க்கன்பாளையத்தில் கிராமத்திற்குள் நுழைந்த 3 காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பகல் வேளை என்பதால் அதிகமான மக்கள் நடமாட்டம் உள்ளது. எனவே, வனத்துறையினர் மிகுந்த கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடன் யானைகளைக் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...