கோவை : கோவையில் இயங்கும் அரசு பேருந்துகளினால் போதிய வருமானம் வராத காரணத்தால் பேருந்துகளின் எண்ணிக்கையில் 10 % குறைக்க டி.என்.எஸ்.டி.சி திட்டமிட்டுள்ளது.

அரசு பேருந்துகள், பள்ளி குழந்தைகள் தொடங்கி நடுத்தர வர்க்க மக்கள் வரை அனைவருக்கும் மிக முக்கியமானத் தேவையாக இருந்து வருகிறது. கோவை நகரம் முழுவதுமாக சுமார் 1075 பேருந்துகள் இயங்கி வருகின்றன. அதில், 722 நகரப்பேருந்துகளும், 353 புறநகரப்பேருந்துகளும் அடங்கும்.
இந்நிலையில், பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமிருந்தும் போதிய வருமானம் இல்லை என கூறி 10 % அரசு பேருந்துகளை குறைக்கவுள்ளதாக, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் வெளிவந்த இந்தத் தகவல் குறித்து டி.என்.எஸ்.டி.சி அதிகாரிகள் கூறுகையில், " அரசு பேருந்துகளை பராமரிக்கும் செலவுகளைக் கணக்கிடும் போது அதனுடைய வருமானம் சொற்ப அளவில் தான் இருக்கிறது. எனவே, 10 % பேருந்துகளை குறைத்து அதனை சரிசெய்யலாம் என திட்டமிடப்பட்டது. இதைப் பற்றி அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து சரியான முடிவு எடுக்கப்படும்," என்றனர்.
இந்த முடிவு அரசு பேருந்துகளை நம்பியிருக்கும் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.