விரைந்து இழப்பீடு வழங்கியதற்காக அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி கூறிய நில உரிமையாளர்கள்

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கியதற்காக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை நேரில் சந்தித்து நில உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் வழங்கியதற்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கியதற்காக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை நேரில் சந்தித்து நில உரிமையாளர்கள் நன்றி தெரிவித்தனர். 

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என சொல்லக்கூடிய கோவை மாநகரின் வளர்ச்சிக்கு கோவை விமான நிலைய விரிவாக்கம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனையடுத்து, 2010-ம் ஆண்டு முதல் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நிலங்களை கையகப்படுத்த பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக 624 ஏக்கர் நிலங்கள் விமான நிலையத்தை ஒட்டியுள்ள சின்னையம்பாளையம், இருகூர், நிலம்பூர், நீலிக்கோணாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டன. இதில் 461 ஏக்கர் பட்டா நிலங்கள், 28 ஏக்கர் பயன்படுத்தப்படாத புறம்போக்கு நிலங்கள், முப்படைகளுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.

இதனிடையே, குறிப்பிட்ட தொகை நிர்ணயிக்கப்பட்டு கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில், கோவை அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை சந்தித்த சிங்காநல்லூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, பாரதி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நில உரிமையாளர்கள், நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்கியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...