கோவை : தி.மு.க.,வின் கோவை மாநகர மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தி.மு.க.,வின் 14-வது பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக அக்கட்சியைச் சேர்ந்த மகுடபதி, முருகன் மற்றும் ராஜேஷ்வரி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், பீளமேடு பகுதியின் துணை செயலாளராக நாகராஜன், பாப்பநாயக்கன் புதூர் பகுதி துணை செயலாளராக அபிராமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, பதவியேற்றுக் கொண்ட புதிய உறுப்பினர்கள் இன்று வடகோவை பகுதியில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் திரண்டனர். அங்கு, முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.,வின் முன்னாள் தலைவரான கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. கார்த்திக், பொறுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.