கோவை : ஆலயங்கள் காட்சிப் பொருளாக மாற்றக்கூடாது என்றும், ஆலயங்கள் ஆலயங்களாகவே இருக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை : ஆலயங்கள் காட்சிப் பொருளாக மாற்றக்கூடாது என்றும், ஆலயங்கள் ஆலயங்களாகவே இருக்க வேண்டும் என தஞ்சை பெரிய கோவில் விவகாரம் குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- மேகதாது விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் முன்னதாக ஒரு காரியத்தை செய்ய தமிழக முதலமைச்சர் தவறியிருக்கிறார். முதல் தீர்மானமாக தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியினரை பெங்களூரூ அனுப்பி கர்நாடக அரசிடம் பேச சொல்லியிருக்க வேண்டும். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டும் பழக்கத்தை தற்போதும் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி செய்து வருகிறது, என்றார்.
தொடர்ந்து, கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு பைசா கூட வரவில்லை என்ற அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்திருப்பதாவது :- அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை. மத்திய குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என்றும் எனக்கு தெரியவில்லை. அறிக்கை சமர்ப்பித்த பின்னர் இது சுமூகமாக முடியும், என்றார்.
தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு நடத்த இருந்த நிகழ்ச்சிக்கு நடத்த தடை விதிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, என்னைப் பொறுத்தவரை ஆலயங்கள் காட்சிப்பொருளாக மாற்றப்படக்கூடாது. இந்தப் பிரச்சனை குறித்து முழுமையாக தெரியாததால் கருத்து கூற விரும்பவில்லை. ஆலயங்கள் ஆலயமாக மட்டுமே இருக்க வேண்டும். எனக் கூறினார்.
மேலும், மோடியின் உடை குறித்தும், வெளிநாடு சுற்றுப்பயணம் குறித்து வைகோ பேசி வருவது குறித்த கேள்விக்கு அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில் :- பிறந்தது முதல் ஒரே உடையில் தான் வாழ்கிறார்களா..?. உடைகளை பற்றி பேசுவதற்கு தமிழக அரசியல்வாதிகளுக்கு தகுதி என்பதே கிடையாது. எளிமையான மனிதர் மோடி. மோடி குறித்து பேச யாருக்கும் அருகதை இல்லை. ராமர் பிள்ளை விவகாரம் நீண்ட காலமாக உள்ளது. ஆதாரப்பூர்வமாக உள்ள நிலையில், அது குறித்து பேச தயாராக தான் உள்ளோம். எதையும் உதாசீனப்படுத்தவில்லை.
மேலும், கோவையில் ஜெயலலிதா சிலையிடம் ஏ.பி.வி.பி. மாணவர்கள் மனு கொடுத்தது தவறு. கழகங்கள் செய்வது போல சிலையிடம் ஏன் இவர்கள் மனு கொண்டுகொடுக்க வேண்டும். ஏ.பி.வி.பி. மாணவர்கள் தெரியாமல் செய்துள்ளனர், என அவர் தெரிவித்தார்.