கோவை : தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 4-வது கும்கி யானையான வாசிம் இணைக்கப்பட்டது.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு காட்டு யானைகள் பெரிதும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன. இதனால், ஏற்படும் மனித-விலங்கு மோதல்களால், உயிர் பலியும் ஏற்படுகிறது. குறிப்பாக, சின்னதம்பி, விநாயகன் ஆகிய இரண்டு யானைகள்தான் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களுக்கு வனத்துறை அதிகாரி ஒருவரை காட்டு யானை மிதித்துக் கொன்றது.

இதனால், காட்டு யானைகளின் தொந்தரவை முறியடிக்கும் விதமாக முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சேரன், பொம்மன், விஜய் ஆகிய 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானைகள் உருவத்தில் மிகவும் பெரியது என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்த இந்த கும்கி யானைகளினால் முடியவில்லை. இதனால், முதுமலை முகாமில் இருந்த கும்கி வாசிமை வரவழைக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். ஆனால், அதற்கு மதநீர் சுரந்ததால், தடாகம் ஆபரேசனுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதேவேளையில், டாப்சிலிப்பில் இருந்த கலீமை பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், அந்த யானைக்கு இதே பிரச்சனை ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது சீரடைந்த கும்கி யானை வாசிம், தடாகம் பகுதியில் அச்சுறுத்தி வரும் விநாயகன், சின்னதம்பி ஆகிய காட்டு யானைகளை விரட்டும் பணிக்காக தடாகம் அழைத்து வரப்பட்டுள்ளது.