திருப்பூர் : திருப்பூரில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் நோக்குடன் ரயில் நிலையம், பேருந்து நிலையங்களைத் தூய்மைப்படுத்தும் பணியில் எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் ஈடுபட்டனர்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் வகையில் ஸ்வச் பாரத் என்னும் தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 2014 -ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் கடந்த 4 வருடங்களாக நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் கிட்டம்பாளையம் பகுதியில் இருக்கும் எல்லை பாதுகாப்பு படை பிரிவினர் சார்பில் இன்று தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், 80 -க்கும் மேற்பட்டோர் குழுக்களாக திருப்பூர் ரயில் நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019 -ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் தூய்மை இந்தியா திட்டத்தினை முழுமையாகச் செயல்படுத்தினால் 3 லட்சம் இறப்புகளைத் தடுக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.