60 ஆண்டுகளுக்கு மேலான நீலகிரி உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூட மத்திய அரசு முடிவு : விவசாயிகள் அதிருப்தி

நீலகிரி : நீலகிரியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நீலகிரி : நீலகிரியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி, சைனீஸ் காய்கறிகள் என பலதரப்பட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, உருளைக்கிழங்கு ஆண்டின் 3 பருவங்களிலும் பயிரிடப்படுகிறது. ஒவ்வொரு பருவத்திற்கும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் வரை உருளைக்கிழங்கு பயிரிடப்படுகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் உருளைக்கிழங்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக, உருளைக்கிழங்கு குறித்து ஆராய்ச்சி செய்யவும், நோய்தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடித்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கடந்த 1957-ம் ஆண்டு உதகையை அடுத்த முத்தோரை பாலாடா பகுதியில் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தை அப்போதைய மத்திய அரசு தொடங்கியது. 

இந்த ஆராய்ச்சி நிலையம் நூல்புழு மற்றும் இலைகருகல் நோய்கள் தாக்காத உருளைக்கிழங்கு விதையை கண்டுபிடித்தது. மேலும், திசுவளர்ப்பு, மகரந்த சேர்க்கை போன்ற முறைகள் மூலமாக குப்ரிகிரிதாரி, குப்ரிசூர்யா உள்பட பலவகையான உருளைக்கிழங்கு ரகங்களையும் கண்டுபிடித்து, அவற்றின் விதைகளை விவசாயிகளுக்கு குறைந்த விலைக்கு அளித்து வருகிறது. 3 ஆராய்ச்சியாளர்கள், 3 தொழில்நுட்பவல்லுநர்கள் உள்பட 12 நிரந்தர பணியாளர்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக பணிகர்களை கொண்டு செயல்பட்டு வரும் இந்த ஆராய்ச்சி நிலையத்தை, தற்போது மத்திய அரசு மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு மூடப்பட்டால் நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு விதை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் ஏராளமான உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், தென்னிந்தியாவில் செயல்பட்டு வரும் ஒரேயொரு உருளைக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்தையும் மூட மத்திய அரசு முடிவெடுத்து இருப்பது விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது:- இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை மூடக்கூடாதென்று மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம், இவ்வாறு தெரிவித்தனர். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...