கோவை : இடதுசாரிகள் கட்சிகளையும், திராவிட கட்சிகளையும் விமர்சித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "5 மாநில தேர்தலில் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துவிட்டு பா.ஜ.க வாக்கு சேகரித்துள்ளது. தேர்தல் கருத்துக்கணிப்புகள் எப்படி இருந்தாலும் தெலுங்கானா தவிர்த்த மற்ற மாநிலங்களில் தேர்தலில் வெற்றி பெறுவோம். பெட்ரோல் விலை குறைப்பில் பிரதமர் மோடிக்குப் பங்குண்டு அதனால் தான் பிரதமர் மோடிக்கு ஆதரவு பெருகி வருகிறது," என்றார்.
மேலும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவின் சவால் குறித்து, "மத்திய நீர்வள துறை ஆணையரே தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் அணை கட்ட முடியாது என சொல்லியுள்ளார். இதற்கிடையில், அவர் பிரிவினை பேசி அரசியல் இலாபம் பெறவே, ஆக்கப்பூர்வமற்ற வகையில் நிலை தடுமாறி பேசி வருகிறார்," என்று பதிலளித்தார்.
இந்நிலையில், தலைகீழாக நடந்தாலும் தாமரை மலராது என்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து குறித்த கேள்விக்கு, "தாமரை மலர நேர்மையாக நடந்தால் போதும். மேலும், திமுக கூட்டணியே பலவீனமான கூட்டணிதான், எனவே, எங்கள் கூட்டணியை பற்றி முத்தரசன் கவலைப்பட தேவையில்லை " என பதிலளித்தார்.
மேலும், அவர் பேசுகையில், "இடதுசாரிகள் ஆட்சி ஒரு மாநிலத்தில் தான் இருக்கிறது. மீதியிருக்கும் 19 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. காவியைப் பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம். மக்கள் வாழ்விற்காகத் தான் தாமரை மலர வேண்டும் என விரும்புகிறோம்," எனத் தெரிவித்தார்.