டாலரை ஓரங்கட்டிவிட்டு ரூபாய் மதிப்பில் வர்த்தகம் : ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா புதிய ஒப்பந்தம்

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடையே நடைபெறும் வர்த்தக பரிமாற்றங்களில் சொந்த நாட்டு பணத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடையே நடைபெறும் வர்த்தக பரிமாற்றங்களில் சொந்த நாட்டு பணத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

பழங்காலத்தில் பண்டமாற்று முறையிருந்ததால் ஒரு பொருளுக்கு இணையாக இன்னொரு பொருள் மாற்றிக் கொள்ளப்பட்டது. அதன் பின்பு மனிதர்களின் நாகரீக உலகினுள் பணம் கண்டுபிடிக்கப்பட்டது. அவை ஒவ்வொரு நாடுகளுக்கும் தகுந்தது போல மதிப்பிடப்பட்டன. வர்த்தக முறையில் அதன் மதிப்பு ஏற்ற-இறக்கங்களைக் கொண்டிருந்தது. அதில் பணக்கார நாடுகள் தங்கள் நாணயத்தின் மீது அதிக மதிப்பினை தக்க வைத்துக் கொள்ள முற்பட்டன. 

அந்த வகையில், சர்வதேச அளவில் முன்னிலை வகிப்பது அமெரிக்க டாலர் ஆகும். எனவே, பல்வேறு நாடுகள் அமெரிக்க டாலர்களிலே வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து தங்கள் வர்த்தகத்தை யூரோ நாணத்தை முன்னிறுத்தி மேற்கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே, பொருளாதார நிலையில் பின்தங்கிய நாடுகளுக்கு இது போன்ற வாய்ப்புகள் இல்லை

இதற்கிடையில், சில ஆண்டுகளாகவே சொந்த நாட்டின் பண மதிப்பிலே வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து இந்தியா திட்டமிட்டு வருகிறது. அது கைகூடும் வகையில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய பிரிவுகளில் இணைந்து செயல்படுவதற்கான வர்த்தக ஆலோசனை கூட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடைபெற்றது. அதில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் ஜயாத் அல் நயானும் இருவரும் கலந்து கொண்டனர். 

இது இவ்விரு நாடுகளுக்கு இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்பக் கூட்டுறவுக்கான 12 -வது கூட்டமாகும். இதில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்தவும், புதிய பிரிவுகளில் இணைந்து செயல்படவும் ஆலோசனை நடைபெற்றது. இந்தப் பேச்சு வார்த்தையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே, "வர்த்கத்தின்போது, சொந்த நாட்டு பணத்தில் பரிவர்த்தனை செய்து கொள்ளும் ஒப்பந்தம்" கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இரண்டு நாடுகளும் தங்களுடைய சொந்த நாட்டு நாணயத்தின் மூலம் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கும் அதே வழியில் பணம் பரிமாறிக் கொள்ளலாம். இதனால், வேறுநாட்டு நாணயத்தினை சார்ந்து இருக்கத் தேவையில்லை.

இந்திய வர்த்தகர்களும் இந்திய ரூபாய் மதிப்பில் இந்திய சந்தைகளை கணக்கீட்டு ஐக்கிய அரபு அமீரகத்துடன் வர்த்தகம் செய்ய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இதனால், அதிக ஏற்றுமதி வாய்ப்பு உள்ள நாடுகளுடன் சொந்த நாட்டு நாணயத்தில் பரிவர்த்தனை செய்ய இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...