கோவை : திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை கீரணத்தம் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது :- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது. மேலும், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை உள்ளது. அம்பேத்கர் உருவப்படம் முன்பாக இளைஞர்கள் சில சமுதாய பெண்களை கொச்சைப்படுத்தி பேசுவது, அச்சமுதாயத்தினை கொதிப்படைய செய்துள்ளது.
திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தேசத்தந்தை காந்தி இல்லை. கலவரத்தை தூண்டும் வகையில் சினிமா பாணியில் அவர் பேசுகிறார். அரசாங்கம் வேடிக்கை பார்க்காமல் அவரை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் மிகப்பெரிய அளவில் கலவரம் உருவாகி மிகப்பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
கஜா புயல் நிவாரணமாக மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என அமைச்சர் கருத்து தெரிவித்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையை மத்திய அரசு உடனடியாக தர வேண்டும். கொ.ம.தே.க. - தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறது.
கொங்கு மண்டலத்தில் 12 தொகுதிகளிலும் செயல்பாடுகள் நடந்து வருகிறது. முகவர்களை நியமிக்கும் பணியை துவங்கியுள்ளது. மேகதாது அணை விவகாரத்தில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை உடன் வைத்து போராடுவது சங்கடமான விசயம். மேகதாது பிரச்சனையில் தமிழக முதலமைச்சர் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது. நீதிமன்றம் மூலமாக மட்டுமே தீர்வு காண வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.