பள்ளிகளில் ஜவுளிகளைப் பற்றி புதிய பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குறுதி

ஈரோடு : டெக்ஸ்வேலி ஜவுளி கண்காட்சியில் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிடும் விழா அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு : டெக்ஸ்வேலி ஜவுளி கண்காட்சியில் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிடும் விழா அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு அருகே கங்காபுரம் டெக்ஸ்வேலியில் நடைபெறும் பிரமாண்ட ஜவுளி கண்காட்சியில் கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமிடும் விழா நடைபெற்றது. இதில், ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 25 கல்லூரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இவ்விழாவில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இவ்விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது :- "இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 60% ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. ஆனால் அதற்கேற்ப பருத்தி உற்பத்தி தமிழகத்தில் இல்லை. வடமாநிலங்களில் இருந்து பருத்தி தமிழகத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், அங்கு எந்திரத்தில் காற்று அழுத்தம் மூலமாகப் பருத்தி எடுக்கும் நிலை உள்ளது. இதுபோன்ற தொழில்நுட்பங்களை கொண்டு வர விவசாயிகள், தொழில் அதிபர்கள் இணைந்து ஒத்துழைப்பது அவசியம். 

மேலும், இந்தியாவில் 80 லட்சம் பேர் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர். தமிழகத்தில் சுமார் 2 லட்சம் வரையிலும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். எனவே, திறன் படிப்பு கற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, பள்ளிக்கூடங்களில் புதிய பாடத்திட்டத்தில் ஜவுளி தொடர்பான பாடத்தைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்," இவ்வாறு அவர் பேசினார்.

"தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்து ஜவுளி தொழிலில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக, தமிழகத்தில் 45 லட்சம் பேர் ஜவுளி தொடர்பான வேலை செய்து வருகிறார்கள். ஜவுளி தொழிலில் சாயப்பிரச்சினை பெரிய சவாலாக இருந்து வருகிறது. அதிலும், ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இப்பிரச்சினை அதிகமாக உள்ளது. இதற்குத் தீர்வாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நிதி ஒதுக்கினார். 

ஆனால், அதற்கான இடம் தேர்வு செய்யும்போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எனவே, தொழில் அதிபர்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உண்மை நிலையை எடுத்துக் கூற முன்வரவேண்டும்," என உரையாற்றினார் அமைச்சர் பி.தங்கமணி. 

அவர்களைத் தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், "தகவல் தொழில்நுட்பம், கைத்தறி, ஜவுளி ரகங்கள், உரம் என எந்தத் துறையை எடுத்தாலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகிறது. தேசிய அளவிலான பொருளாதார வளர்ச்சி 7.4 % இருந்தபோதும் கூட தமிழகத்தில் 7.9 % இருக்கிறது. இதற்கிடையில், கடந்த 2017- 18 ஆம் ஆண்டு தேசிய பொருளாதார வளர்ச்சி 6.03 % ஆக இருந்த நிலையிலும் கூட தமிழகத்தின் வளர்ச்சி 8.01 % ஆக இருந்தது. 

புதிய தொழில் முனைவோர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தி உள்ளார். இத்திட்டத்தின்படி, 11 துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. இதில், அந்த துறை தொடர்பான சந்தேகங்களை ஒரே சமயத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மேலும், அனைத்துக் கட்டணங்களையும் ஒரே தவணையில் இணையம் மூலமாகச் செலுத்த முடியும். 

இத்திட்டத்தில் இதுவரை 2,211 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 168 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த அனுமதிப் பட்டியலில் 23 பெரிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கடந்த 3 மாதங்களில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு பெறப்பட்டதுடன், 44 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்," என்றார்.

அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறுகையில், “தொழில் வளர்ச்சியைப் பெருக்குவதன் அடிப்படையில் தமிழகம் சிறப்பாகச் செயலாற்றி வருகிறது. தொழில் வளர்ச்சி அடைந்தால் வேலை வாய்ப்பு பெருகும். பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்பதால் புதிய தொழில் முனைவோர்களுக்குத் தேவையான நடவடிக்கையை எடுத்து அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்”, என்றார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...