திருப்பூர் வங்கியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.18 கோடி மோசடி : வங்கி முதுநிலை மேலாளர் கைது

திருப்பூர் : போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.18 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்களுக்கு, உடந்தையாக இருந்த முதுநிலை வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் : போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.18 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர்களுக்கு, உடந்தையாக இருந்த முதுநிலை வங்கி மேலாளர் கைது செய்யப்பட்டார்.

திருப்பூரைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர், தனது மனைவி ப்ரியா மற்றும் நண்பர் ராஜேஷ்கண்ணா ஆகிய இருவர் பெயரிலும் தனித்தனியே போலி பின்னலாடை நிறுவனங்கள் தொடங்கியிருக்கிறார். அதற்காக, திருப்பூர் (கார்ப்ரேஷன்) வங்கியில் ரூ.10.25 கோடி கடன் பெற்றுள்ளார். இந்தக் கடனை அடைக்க வேண்டிய சூழலில், பணத்தேவை அதிகம் உள்ளவர்கள் மற்றும் வங்கியால் கடன் அளிக்க முடியாது என தவிர்க்கப்பட்ட பின்னலாடை அதிபர்களை அணுகியுள்ளார். 

இதையடுத்து, அவர்களிடத்தில் ஏற்றுமதியாளர் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வரவுத் தொகையை நேரடியாக வரவு வைப்பது எனும் சான்றிதழ்களை சமர்ப்பித்து கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய தொழில் அதிபர்கள் செந்தில் குமாரிடம் தங்கள் ஆவணங்களை ஒப்படைத்துள்ளனர். செந்தில்குமார், அந்த ஆவணங்களைத் தனது தேவைக்கேற்ப போலி ஆவணங்களாகத் தயார் செய்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, அந்த ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்து ரூ.18 கோடி ரூபாயைக் கடனாக பெற்றிருக்கிறார். இந்நிலையில், அவர் வாங்கிய கடனுக்கு தவணை கட்டாமல் இருந்ததால், ஆவணங்களுக்கு உரியவர்களை வங்கி தரப்பில் இருந்து கடன் தொகையைத் திரும்ப செலுத்த வலியுறுத்தியுள்ளனர். அப்போது தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஹாரூன்ரஷித், சிவப்பிரகாசம், ராமசாமி மூவரும் போலீசாரிடம் புகாரளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மாநகர குற்றப் பிரிவு காவல்துறையினர், ரூ.18 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் செந்தில் குமார், அவரது மனைவி பிரியா இருவரையும் கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்தனர். தொடர்ந்து, வங்கி ஊழியர் சோமயஜிலுவை கைது செய்தனர். அவர் தற்போது நிபந்தனை பிணையில் வெளிவந்துள்ளார்.

மேலும், இவ்வழக்கில் மோசடி செய்தவர்களுக்கு உதவியாக இருந்த வங்கியின் வங்கி முதுநிலை மேலாளர் சங்கர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை மாநகர குற்றப் பிரிவு காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...