நீலகிரி : தெற்காசிய அளவிலான 3 -வது திரைப்பட விழாவை இயக்குநர் ஜாய் மேத்யூ மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.
நீலகிரி : தெற்காசிய அளவிலான 3 -வது திரைப்பட விழாவை இயக்குநர் ஜாய் மேத்யூ மற்றும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தனர்.

உதகை பிலிம் சொசைட்டி சார்பில் நடைபெறும் 3-வது திரைப்பட விழா நேற்று மாலை தொடங்கியது. டிசம்பர் 9 -ம் தேதி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகபிரியா, இயக்குநர் ஜாய்மேத்யூ, இயக்குநர் கிரீஷ் தாமோதர், எழுத்தாளர் முருகேச பாண்டியன் உள்ளிட்ட பல ஆளுமைகள் இணைந்து தொடங்கி வைத்தனர்.

மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "திரைப்படங்கள் ஒருகலாச்சாரக் கலவை, கலாச்சாரத்தின் பிரதிபலிப்பு அவற்றைச் சரியான வழியில் கையாள வேண்டும்," என்றார்.
மேலும், மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இக்குறும்பட விழாவில் மொத்தம் 90 குறும்படங்கள் திரையிடப்படுகிறது. அதில், சிறந்த 5 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றிற்கு நிறைவுநாளான டிசம்பர் 9 -ம் தேதி இயக்குநர் பாரதிராஜா தங்கயானை விருது வழங்க உள்ளார். சிறப்பாக, அதே தினத்தில் இன்னும் வெளிவராத அவரது திரைப்படம் 'ஓம்' திரையிடப்படவுள்ளது.