கோவையில் இரண்டு பெண்குழந்தைகளை கொன்றுவிட்டுத் தலைமறைவான தந்தை கைது

கோவை : மசக்காளிபாளையம் பகுதியில் 2 பெண் குழந்தைகளைக் கொன்று விட்டுத் தலைமறைவாக இருந்த தந்தையை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.



கோவை : மசக்காளிபாளையம் பகுதியில் 2 பெண் குழந்தைகளைக் கொன்று விட்டுத் தலைமறைவாக இருந்த தந்தையை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.



கோவையில் மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பத்மநாபன் (45). இவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஹேமா வர்ஷினி (15), ஜீவா (8), என்ற இரண்டு பெண் குழந்தைகள். இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் 10 மற்றும் 3 வகுப்பு படித்து வந்தனர். பத்மநாபன் மார்க்கெட்டிங் பிரதிநிதியாகப் பணிபுரிந்து வருகிறார். 

கணவன் மனைவிக்குள் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. வழக்கம் போலவே, நேற்று முந்தைய நாள் இரவும் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதையடுத்து, கோபத்தில் வீட்டை விட்டு கிளம்பிய செல்வராணி, வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். குழந்தைகள் இருவரும் மசக்காளிபாளையத்தில் தந்தையுடன் இருந்துள்ளனர்.

நேற்று காலையில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்காக வீட்டுக்கு வந்த போது கதவு திறந்து கிடந்திருக்கிறது. வீட்டிற்குள்ளே சென்று பார்த்த போது குழந்தைகள் படுக்கையிலே இறந்து கிடந்திருக்கின்றனர். அந்த சமயத்தில் கணவர் பத்மநாபனும் வீட்டில் இல்லை. 



இந்நிலையில், குழந்தைகள் இருவரும் இறந்தவாறு படுக்கையில் கிடந்ததை கண்டு மனமுடைந்த தாய் செல்வராணி, சிங்காநல்லூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தினர். 

மேலும், குற்றவாளியான பத்மநாபனை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவல்துறை குழு நேற்றிரவு பத்மநாபனை கைது செய்து, கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...