திருப்பூர்: தாராபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 ஆயிரம் ரொக்கம், 45 பவுன் தங்க நகைகள், 1.5 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோக பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எல்லீஸ் நகர் அருகே சரஸ்வதி நகர் தியாகராஜன் என்பவர் கட்டிட கான்ரேக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வமதி அரசு ஆசிரியை பணியில் உள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து கதவை திறக்கும் போது முன் கதவு உடைக்கப் பட்டதை பார்த்து அதிர்ந்து அருகில் இருந்த உறவினர்கள் மற்றும் தாராபுரம் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், வீட்டின் உரிமையாளர் தியாகராஜனிடம் மேற்கொண்ட விசாரினையில் 45 பவுன் தங்க நகைகள், 35000 பணம்,1.5 லட்சம் மதிப்புள்ள டி.வி மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்தது..இதனையடுத்து வழக்கு பதிவு செய்த தாராபுரம் குற்றபிரிவு போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.