கோவை : ஜவுளிப் பொருட்கள் மீதான டியூட்டி டிராபேக் சலுகை விகிதத்தை உயர்த்திய மத்திய அரசின் நடவடிக்கைக்கு சைமா வரவேற்பு தெரிவித்துள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அவ்வப்போது, பல்வேறு ஏற்றுமதி பொருட்களுக்கான டியூட்டி டிராபேக் சலுகையின் விகிதங்களை மாற்றி அமைப்பது வழக்கம். அதன்மூலம், பொருட்கள் வரி விதிக்கப்பட்டு, ஏற்றுமதியாவதை தடுத்து, நமது ஜவுளிப் பொருட்கள் பன்னாட்டு சந்தையில் போட்டியிட்டு ஒரு சமதளம் உருவாக்கப்படும். ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்த பின்ன, வரி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து, ஜவுளித்துறையினர் டியூட்டி டிராபேக் சலுகையின் விகிதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2018-19-ம் ஆண்டுக்கான டியூட்டி டிராபேக் சலுகையின் விகிதத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, பல்வேறு ஜவுளிப் பொருட்களுக்கு ஓரளவு அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்பு தெரிவித்துள்ளது.
சைமா தலைவர் ப. நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பிரதமர் மோடி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஆகியோருக்கு ஜவுளித்துறையினரின் வேண்டுகோளை ஏற்று டியூட்டி டிராபேக் சலுகையின் விகிதத்தை உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டப்பட்ட இந்த சலுகையானது, ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதன்மூலம், அவர்கள் பன்னாட்டு சந்தையில் போட்டியிட வழிவகுக்கும். பல்வேறு பொருட்களின் உச்சவரம்பு சலுகையை நீக்கியது, தற்போதைய அறிவிப்பின் சிறப்பம்சமாகும், என்றார்.
பருத்தி நூலுக்கான டியூட்டி டிராபேக் விகிதத்தை 1.2 சதவீதத்தில் இருந்து 1.7 சதவீதமாக உயர்த்தியும், பருத்து துணிக்கு 1.3 சதவீதத்தில் இருந்து 1.6 சதவீதமாக உயர்த்தியும், மெத்தை விரி துணிகளுக்கு 2 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக உயர்த்தியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆயத்த ஆடை மீது டியூட்டி டிராபேக் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.