கோவை : போலி சி.பி.ஐ. அதிகாரி அடையாள அட்டையை பயன்படுத்தி அரசுப் பணி வாங்கி தருவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட கேரள இளைஞரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலத்தைச் சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் தனது கணவரைப் பிரிந்து இரு குழந்தைகளுடன், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் திருப்பலூர் பகுதியைச் சேர்ந்த ராஜகிரி (32) என்பவருடன் கோவை பி.கே.புதூர் சத்யா நகரில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், பல பெண்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை அறிந்த அன்னலட்சுமி, ராஜகிரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, அதேபோல செய்து வந்ததால், ஆத்திரமடைந்த அவர், குனியமுத்தூர் காவல்துறையினரிடம் ராஜகிரி தொடர்பாக புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரித்த போலீசார், ராஜகிரி போலி சி.பி.ஐ. அதிகாரி அடையாள அட்டையை பயன்படுத்தி, கோவை மற்றும் சேலத்தில் பல பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. அவரிடமிருந்து போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். ராஜகிரியால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், கோவை மாநகர காவல்துறையினரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.