நாட்டின் தலைமை ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்

இந்தியாவின் தலைமை ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியருமான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தலைமை ஆலோசகராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியருமான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், தலைமை பொருளாதார ஆலோசகராக 2014-ம் ஆண்டு அக்டோபர் 16ல் அரவிந்த் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டார். அவர், தனது சொந்த காரணங்களுக்காகக் கடந்த ஜூன் 20-ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, காலியாக இருந்த தலைமைப் பொருளாதார ஆலோசகர் பதவிக்கு பொருளாதாரத்துறை வல்லுநர்கள் சிலரது பெயரை மத்திய அரசு பரிசீலித்து வந்தது.

உலக வங்கியில் இந்தியாவின் பொருளாதார ஆலோசகராக உள்ள பூனம் குப்தா மற்றும் ஹைதராபாத் இந்திய வணிகவியல் பள்ளியின் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் ஆகியோரது பெயர் முன்னிலையில் இருந்தது. 

இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...