கொடிநாள் நிதிவசூல் ரூ. 99.83 லட்சமாக நிர்ணயம் : கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை : கோவை மாவட்டத்தில் கொடிநாள் நிதிவசூல் 2018ம் ஆண்டிற்கு ரூ. 99.83 லட்சம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.


கோவை : கோவை மாவட்டத்தில் கொடிநாள் நிதிவசூல் 2018ம் ஆண்டிற்கு ரூ. 99.83 லட்சம் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று படைவீரர் கொடிநாளை முன்னிட்டு ஆட்சியர் த.ந. ஹரிஹரன் நிதிவசூல் செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது :-  முன்னாள் படைவீரர்கள் ஊனமுற்ற படைவீரர்கள், போர்விதவைகள் மற்றும் குடும்பத்தினருக்கு கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்களுக்காக, கொடி நாளில் திரட்டப்படும் நன்கொடைகள் முழுவதுமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கொடிநாள் வசூல் இலக்கைத் தாண்டி கோவை மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.  



கடந்த ஆண்டு ரூ. 90.76 லட்சம் கோவை மாவட்டத்திற்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை விட அதிகமாக 108 சதவிகிதமான அளவிற்கு ரூ. 1.05 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டிற்கு ரூ. 99.83 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வருடமும் படைவீரர் கொடி நாள் நிதிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கினைவிட கூடுதலாக வழங்கிட கேட்டுக்கொள்கிறேன், எனக் கூறினார். 

முன்னதாக, போரின்போது உடன் ஊனமுற்ற வாரிசுதாரரின் திருமண உதவித்தொகையாக ரூ. 50,000 மற்றும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களான 25 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3.66 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகை என மொத்தம் ரூ. 4.16 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன்  வழங்கினார்.

இதேபோல, நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற கொடிநாள் விழாவில், 26 பயனாளிகளுக்கு ரூ. 5,29,000 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு ரூ. 57,84,000-மும், இந்த ஆண்டு ரூ.10,60,300 கொடிநாள் தொகையாக திரட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். எனவே, கொடிநாள் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.



Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...