தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதி

நீலகிரி : தற்போது மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார்.

நீலகிரி : தற்போது மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என நகராட்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உறுதியளித்துள்ளார். 



நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் பள்ளி கல்வித்துறை, பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, நகராட்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் சுமார் 35 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், முடிவடைந்த பணிகளை நகராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தற்போது தமிழகத்தில் பெய்த கஜா புயலின் போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. உயிர்ச்சேதமும் அதிகமாக ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தனது துறை மூலமாக புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் பகுதிகளில் 25 ஆயிரம் பேர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமங்களிலும் மின்சார இணைப்புகள் சீராகி வருகின்றன. மத்திய அரசிடம் வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 15 ஆயிரம் கோடி கேட்டுள்ளோம். அதனை தமிழக அரசு மூலம் மத்திய அரசிடம் வலியுறுத்தி நிதி வாங்கப்படும்.



தற்போது, மூடப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது. அதில், தமிழக அரசு தெளிவாக இருக்கிறது, என அவர் கூறினார். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...