கோவை : தடாகம் பகுதியில் இருந்து யானைகளை தற்காலிகமாக வெளியேற்றும் நடவடிக்கை தவிர்த்து, அதன் வழித்தடங்களை மீட்டெடுப்பதே மனித - விலங்குகள் மோதலை தடுக்க சிறந்த முயற்சி என வன மற்றும் விலங்குகள் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வனப்பகுதிகளில், விலங்குகள் செல்லும் பாதைகளில் இடைஞ்சல்கள் ஏற்படும் சமயங்களில், அவை மாற்றுப்பாதைகளைத் தேடி அலைகின்றன. இந்தப் பயணத்தில் மனித வாழிடங்களில் நுழைந்து, யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே வாழ்வாதார மோதல் ஏற்படுகிறது. கோவையில் கடந்த சில வாரங்களாக இந்த மோதல் பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைக்குன்றுகளுக்கு அருகில் இருக்கும் தடாகம் பகுதிகளில் பல விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த சில நாட்களாக, இரண்டு காட்டுயானைகள் அத்துமீறி நுழைந்து பயிர்களை சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன. மக்களை அச்சுறுத்தி வரும் விநாயகன், சின்னதம்பி என்ற இரண்டு யானைகளுமே சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிராமவாசிகளுக்கும் பரிட்சயமானவை.
ஏனென்றால், அவ்விரு யானைகளும் பயிர் சேதங்கள் மட்டுமின்றி, உயிர்ச்சேதங்களையும் ஏற்படுத்தி வருகின்றன. கடந்த அக்டோபர் 25-ம் தேதி வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் (28) என்பவர் காட்டு யானையை கிராமத்தில் இருந்து வெளியேற்றும் முயற்சியின் போது, யானையால் தாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் குறித்து அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் கூறும்போது, யானையின் குணநலன்களை மாற்றுவதே மனித-விலங்கு மோதல்களைத் தடுக்க சிறந்த வழியாகும் என பரிந்துரைக்கின்றனர். அதேவேளையில், கடந்த 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு தற்போது வனவிலங்குகளின் அச்சுறுத்தல் காணப்படுகிறது. எனவே, வனத்துறையினர் காட்டுயானைகளை வெளியேற்றும் பணியினை விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில், காட்டு யானைகளின் அச்சுறுத்தல் பற்றி தடாகம் பகுதி விவசாயி ஒருவர் பேசுகையில், "என் அப்பாவின் காலத்தில் நட்டு வைத்த தென்னை மரங்களால் 30 வருடத்திற்கு மேலாக நிலைத்து நிற்க முடிகிறது. ஆனால், என்னால் நான் நடும் பயிர்களை வெறும் 10 வருடங்கள் கூட பாதுகாக்க முடியவில்லை," என வருந்துகிறார்.
மனித - விலங்கு மோதல் என்பது வெளிப்படையாகத் தெரியும் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் அல்ல. அது சுயநலன் காரணமாக தோன்றிய அத்துமீறல்களில் விளைந்தது. மாங்கரையில் உள்ள ஆனைக்கட்டி சாலை முதல் ஆலமரமேடு வரையிலும், இரண்டு யானை வழித்தடங்கள் உள்ளதென எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டிருக்கும். அதற்கு எதிரே இருக்கும் இடங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் விலைக்கு வாங்கி பெரிய தடுப்புச் சுவர்களை கட்டி வைத்துள்ளனர். இதனால், யானைகள் செல்லும் வழித்தடம் மறிக்கப்பட்டுள்ளது. எனவே, அவை மாற்றுப் பாதையை தேடி, குடியிருப்பு பகுதிக்குள் புகும் சூழல் ஏற்படுகிறது.
இதனிடையே, யானைகளின் வழித்தடங்கள் பாதுகாப்பின்மையைப் பற்றி இந்தியாவின் வனவிலங்கு அறக்கட்டளை வெளியிட்ட "பாதைகளின் உரிமை" என்ற புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இப்புத்தகத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, யானைகளின் வழித்தடங்களில் ஒவ்வொரு 70 சென்ட்டும் பாதுகாப்பில்லாமல் இருப்பது தெரிய வருகிறது. இதனால், சமீபத்தில் பசுமை தீர்ப்பாயம் யானையின் வழித்தடங்களை அனைத்தையும் கண்டறிந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் இது குறித்து கூறுகையில், "ஆனைக்கட்டியை சுற்றியுள்ள யானை வழித்தடங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஓய்வு விடுதிகளையும், இடங்களையும் தடுப்பு அமைத்து பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனால், யானைகள் வழிதவறி சமவெளிப்பகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. மேலும், மலைக்குக் கீழான பகுதிகளில் செங்கல் சூளைக்காரர்களின் ஆக்கிரமிப்பும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மேல்மருதங்கரை, மாங்கரை, பெரியதடாகம் போன்ற பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூளைகளின் பயன்பாட்டிற்காக நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் அள்ளுவதற்காக இயக்கப்படுகின்றன. மேலும், மலைப் பகுதிகளில் வெறும் 3 அடி அளவிற்கு மட்டுமே மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சட்ட விரோதமாக 70 முதல் 80 அடி வரை ஜே.சி.பி. மூலமாக மணல் சுரண்டப்படுகிறது. இதனால் யானைகளின் வழித்தடங்கள் பாதிப்படைகின்றன," என்கின்றனர்.

"ஆற்றுப்படுகையில் குழிகளைத் தோண்டி மணல் அள்ள எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை. இதனால், யானைகள் குழிகளில் மாட்டிக் கொள்வது தடுக்கப்படுகிறது. இதேபோல, வனத்தை ஒட்டியுள்ள மலைப் பகுதிகளில் செங்கல் சூளைகளின் உரிமையாளர்களால் சட்டவிரோதமாக மண் அள்ளுகின்றனர். இதனால், ஏற்படும் பள்ளங்களில் யானைகள் மறைந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். மேலும், மனித- யானை மோதல் அதிகரிக்கவே இந்த மணல் கொள்ளை வழிவகுக்கிறது.
பெரும்பாலும், யானைகளின் முக்கிய உணவுகளில் ஒன்றான பனை துண்டுகள், செங்கல் சூளைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பனை துண்டுகளின் வாசனையினால் வனப் பகுதிகளில் இருக்கும் யானைகள் ஈர்க்கப்படுகின்றன. இந்த வேளையில், சட்டவிரோதமாக தோண்டப்பட்ட பள்ளங்கள் அவற்றுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது,' என தெரிவிக்கின்றனர் புவியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள்.
இது குறித்து வனத்துறை ஆராய்ச்சியாளர் அஜய் தேசாய் கூறுகையில் ,"யானைகளை சிறைபிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வது நிரந்தர தீர்வை அளிக்காது. இன்று இந்த 2 யானைகளை பிடித்துச் சென்ற பிறகு, நாளை வேறு காட்டு யானைகள் இங்கு வரக்கூடும். நாம் தற்காலிக தீர்வை நோக்கி நகராமல், நீண்ட கால தீர்வைக் கண்டடைவது மட்டும் தான் மனித விலங்கு மோதல்களைக் குறைக்கும்," என்கிறார்.
மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் - https://youtu.be/Tnz7HNM7DR4