மேகதாது அணை விவகாரம் : தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

திருப்பூர் : மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாக மத்திய அரசு மீது கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல்தலைவர் வெற்றி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துவதாக மத்திய அரசு மீது கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல்தலைவர் வெற்றி தெரிவித்துள்ளார். 

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் செயல்தலைவர் வெற்றி உட்பட விவசாய சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில்,  கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும். மத்திய அரசின் பவர்கிரீட் நிறுவனம் இங்குள்ள மின் வாரிய அதிகாரிகள் உதவியோடு, விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமலே விவசாய நிலங்களில் மின் கம்பங்களை நட்டு வருகிறது. இதனை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 



தொடர்ந்து செய்தியாளர்களிடம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல்தலைவர் வெற்றி பேசியதாவது :- விவசாய நிலங்களில் அனுமதியின்றி மின்கம்பங்கள் ஊன்றுவதைக் கண்டித்து கண்டித்து காத்திருப்பு போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றிருக்கிறோம். வருகிற 17-ம் தேதி 8 மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட நீர்வளத்துறை அமைச்சகம் மூலம் அனுமதி அளித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனை மாநில அரசு, மத்திய அரசிடம் கேட்டு தடுத்து நிறுத்த வேண்டும், இவ்வாறு கூறினார். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...