கோவை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிலையிடம் மனு அளித்த அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் மீது அ.தி.மு.க.,வினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்வித்துறையில் மாணவர் சேர்க்கை முதல் துணைவேந்தர் நியமனம் வரை வெளிப்படையான ஏலம் நடப்பதாகவும், மாணவர்களுக்கான கல்லூரி கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கைகளுடன், நிலுவையில் உள்ள கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும், இலவசப் பேருந்து பயண அட்டைகளை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பிற்பகல் அவ்வமைப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கோவை அவினாசி சாலையிலுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலையிடம் மனு அளித்தனர்.

தொடர்ந்து மனுவை அளித்த பின்னர் அம்மாணவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததைக் கண்ட அ.தி.மு.க.வினர் சிலர், அவர்களை கண்டித்ததுடன் திடீரென தாக்கினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த பந்தையசாலை காவல் நிலைய போலீசார், இரு மாணவர்களையும் மீட்டு விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர்.