கோவை : அன்னூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்தக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அன்னூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வரவேண்டியுள்ளது. மேலும், அன்னூர் மருத்துவமனையில் சுகாதாரமின்மை, போதிய படுக்கை வசதியின்மை ஆகியவற்றால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனையடுத்து, மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். மருத்துவர் செவிலியர் பற்றாக்குறையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அன்னூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வலியுறுத்தி அன்னூர் பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதம் நடத்த கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காவல்நிலையத்தில் அனுமதி கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், காவல்துறையினர் கடைசி நேரத்தில் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வந்தவர்கள் திடீரென அன்னூர் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அர்ஜூன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஸ்டாலின் குமார் மாவட்ட செயலாளர் கனகராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முகமது முசீர், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர் சரவணன், பொருளாளர் பிரதீப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.