கோவை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் மக்கள் தங்களின் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில், கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயலாளர் அப்துல் கரீம், செய்தியாளர்களிடம் பேசுகையில், "வரும் 12 -ம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைப் பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகையை அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி மாநில பேச்சாளர் ரஹமதுல்லா தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மேலும், வரும் ஆண்டு ஜனவரியில் 27 -ம் தேதி விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திருக்குரான் மாநில மாநாடு நடத்த உள்ளார். இம்மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக மதவிவகாரங்களில் மத்திய அரசு தலையீடுகளை கண்டித்தும், தேர்தல் சமயங்களில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவோம் என பா.ஜ.க அரசு என கூறுவது உள்ளிட்டவைகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றவுள்ளோம்." என்றார்.