கோவை : மேட்டுப்பாளையம் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் வாழை மரங்கள் மற்றும் பாசன குழாய்களை சேதப்படுத்தியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள கிராமப்புறங்களில் காட்டு யானைகளின் ஊடுருவல் நாளுக்கு நாள் அதிகரித்து, பெருமளவு பயிர் சேதங்கள் ஏற்படுவது தொடர் நிகழ்வாகி வருகிறது. யானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவோ உரிய இழப்பீடு வழங்கவோ வனத்துறை போதிய கவனம் செலுத்துவதில்லை என்பதே இப்பகுதி விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வரும் 20 யானைகளைக் கொண்ட கூட்டமொன்று நேற்றிரவு சாலைவேம்பு என்னும் கிராமத்தினுள் புகுந்தது. முதலில் இங்குள்ள செல்வராஜ் என்பவரது வாழை தோட்டத்திற்குள் புகுந்து, அங்கிருந்த வாழை, அவரை, தட்டை மற்றும் கொள்ளுப்பயிர்களை அழித்து நாசப்படுத்தியதோடு, தோட்டத்தில் இருந்த பாசன குழாய்கள் அனைத்தையும் பிடுங்கி எரிந்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.
போர்வெல் மற்றும் சொட்டு நீர் பாசனத்திற்காக அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் அனைத்தும், இதனால் அடியோடு சேதமடைந்துள்ளன. விவசாய பயிர்கள் மட்டுமின்றி, அதற்கான பாசன ஆதாரங்களும், யானைகளால் அழிக்கப்பட்டு விட்டதால் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர் இப்பகுதி விவசாயிகள். தகவல் தெரிவித்தும் யானைகளை விரட்ட வனத்துறையினர் வராத நிலையில், விவசாயிகளே யானைகளை விரட்ட முயன்றும் பயனிளிக்கவில்லை. அடுத்ததாக அருகில் உள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்த யானைகள் அங்கேயும் மரங்களை சாய்த்து நாசப்படுத்தியது.

யானைகளின் ஊடுருவல் குறித்து தகவல் தகவல் கொடுத்தாலும், உரிய நேரத்திற்கு வனத்துறையினர் வருவதில்லை என புகார் தெரிவிக்கும் விவசாயிகள், வன எல்லையோரங்களில் யானை தடுப்பு அகழிகளை வெட்டாததோடு, யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி விவசாயிகளுக்கு டார்ச் லைட் போன்ற உபகரணங்களையும் வழங்குவதில்லை என்கின்றனர். மேலும், வனத்தை தாண்டும் யானைகளைக் கட்டுப்படுத்தாத வனத்துறை, இதனால் ஏற்படும் இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் வேதனையோடு புகார் தெரிவிக்கின்றனர்.