கோவை : தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில் தகுதி வாய்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்கிட ரூ. 522 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், கிழக்கு மண்டலங்களில் மற்றும் சூலூர் வட்டாரங்களில் வரும் 11-ம் தேதியும், மாநகராட்சி மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதிகளில் வரும் 12-ம் தேதியும் நடக்கிறது.
சர்க்கார் சாமக்குளம், ஆனைமலை, காரமடை வட்டாரம், வால்பாறை நகராட்சிகளில் வரும் 13-ம் தேதியும், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு வட்டாரங்கள், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14-ம் தேதியும், அன்னூர், தொண்டாமுத்தூர், சுல்தான்பேட்டை, மதுக்கரை வட்டாரங்களில் 15-ம் தேதியும், கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் 18-ம் தேதியில், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் மண்டல மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் இந்த சிறப்பு முகாம்கள் நடக்கின்றன.