கோவை : கடந்த மாதம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் காட்டு யானை தாக்கி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நேற்று உயிரிழந்தார்.

கடந்த 26 -ம் தேதி இரவில் நரசிம்மநாயக்கன்பாளையத்துக்குள் 5 காட்டுயானைகள் புகுந்த தகவலறிந்து வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் அங்கிருந்து தப்பி காஸ் கம்பேனி பேருந்து நிறுத்தம் அருகே சாலை தடுப்புகளை உடைத்துச் சென்றது. இதற்கிடையில், கோவை, பெரியநாயக்கன்பாளையம், அறிவொளி நகரைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி விஜயலட்சுமி (41), வேலைக்குச் செல்லுவதற்காக அந்த வழியில் சென்றுள்ளார்.
எப்போதும் போல காலையில் வேலைக்குப் புறப்பட்டு சென்ற விஜயாவை எதிர்பாராத விதமாக 5 காட்டு யானைகள் வழி மறித்து நின்றன. அதில் ஒரு யானை விஜயலட்சுமியை தும்பிக்கையால் தூக்கு வீசப் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும், தொடர்ந்து 10 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.