மடத்துக்குளத்தில் நெல் அறுவடை தீவிரம் : அரசு கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

திருப்பூர் : மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அரசு கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் : மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்று வரும் நிலையில் அரசு கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம், அமராவதி பழைய ஆயக்கட்டு பாசன பகுதியான மடத்துக்குளம் ஒன்றியத்தில் உள்ள குமரலிங்கம், சர்கார் கண்ணாடிபுத்தூர், சோழமாதேவி, கடத்தூர், கணியூர், காரதொழுவு வாய்க்கால்கள் மூலம் சுமார் 7500 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. இதில் விவசாயிகள் சுமார் 5500 ஏக்கர் வரையிலும் நெல் பயிரிட்டுள்ளனர். மீதமுள்ள ஏக்கரில் கரும்பு, மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், பல இடங்களில் கடந்தவாரம் பெய்த புயல் மழையால், செழித்து வளர்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதையடுத்து, விவசாயிகள் உடனடியாக அறுவடையைத் தொடங்கினர். ஆனால், நெற்பயிர்கள் ஈரப்பதமாக இருப்பதால் களத்தில் தார்பாய் விரித்து அதில் நெல்மணிகளை பரப்பிக் காய வைத்துள்ளனர். 

மேலும், நெல் அறுவடை நிறைவடையும் நிலையை எட்டியுள்ளதால், அவற்றை விற்க அரசு கொள்முதல் மையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...