மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் அமைக்கும் பணிகள் தீவிரம்

கோவை : உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பின் மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் அமைக்கும் தேதி அறிவிக்கப்படும்.

கோவை : உயர் நீதிமன்ற விசாரணைக்குப் பின் மேட்டுப்பாளையத்தில் கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் அமைக்கும் தேதி அறிவிக்கப்படும்.



பவானியாற்று கரையோரப்பகுதியான தேக்கம்பட்டி என்னுமிடத்தில் கோவில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் துவக்குவதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் யானைகளுக்குப் புத்துணர்வு அளிக்கும் நோக்கில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு இங்கு நடைபெற்ற 48 நாள் முகாமில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்பட்டு வரும் 33 யானைகள் பங்கேற்றன.

கடந்த 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த ஆண்டும் இங்கேயே யானைகள் முகாம் நடத்த தமிழக அரசு முடிவெடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. வழக்கமாக முகாம் நடைபெறும் பவானியாற்று கரையோரப்பகுதி பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 40- க்கும் மேற்பட்ட யானைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இவற்றைக் கட்டி வைக்கப்படும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்த முகாமில் உள்ள யானைகள் காலை, மாலை என இருவேளைகளும் நடைப்பயிற்சிக்குக் கொண்டு செல்லப்படும். ஆகவே, அதற்கான பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், யானைகள் புத்துணர்ச்சி பெறத் தினசரி ஷவர் பாத் எடுத்துக் கொள்ள வசதியாகப் படுத்தபடி குளிக்கத் தரைதளம் மற்றும் ஷவர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டை விட இவ்வாண்டு கூடுதலாக யானைகள் குளிக்கும் இடங்கள் அமைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முகாமில் பங்கேற்கும் யானைகள் மற்றும் அதன் பாகன்களுக்கான உணவு தயாரிப்பு மற்றும் தங்குமிடங்கள், மின்விளக்குகள் அமைக்கும் பணி, முகாமைச் சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது போன்ற பணிகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்தத் தடை விதிக்கக் கோரி மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "கோவில் யானைகளை அழைத்து வந்து முகாம் நடத்தப்படுவதால், இப்பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து கடும் சேதங்கள் ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார். உயர் நீதிமன்றம் நடத்திய இந்த மனு விசாரணையில், மனு குறித்து டிசம்பர் 14 -ம் தேதிக்குள் இந்து அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இன்னும் முகாம் அமைக்கும் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பதால் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

உயர்நீதிமன்ற விசாரணைக்குப் பின் யானைகள் நலவாழ்வு முகாம் துவங்கும் தேதி அறிவிக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...