உலக நகரங்களைப் பின்னுக்கு தள்ளி வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் முன்னிலை பெற்று திருப்பூர் சாதனை

திருப்பூர் : சர்வதேச அளவில் கணக்கெடுக்கப்பட்ட வளரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.

திருப்பூர் : சர்வதேச அளவில் கணக்கெடுக்கப்பட்ட வளரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது.



ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் என்ற அமைப்பு உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் உள்ள நகரங்களில் உருவாகும் புதிய நிறுவனங்கள், வேலை வாய்ப்பு, மக்கள் தொகை, பணிச்சூழல் ஆகியவைகளை அடிப்படையாக வைத்து இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் வெளிவந்த நகரங்களின் பெயரில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்ற அனைத்துமே இந்திய நகரங்கள் தான் என்பது பல நாடுகளையும் ஆட்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய நகரங்கள்தான் 2030- களில் பெரிய வளர்ந்த நகரங்களாக இருக்கும் என இந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. 



ஆய்வறிக்கையின் படி, வைர வியாபாரம் செழித்து விளங்கும் சூரத் 9.17 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தை ஆக்ரா, அடுத்தடுத்த இடங்களை பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் பிடித்து இருக்கின்றன. இந்த வரிசையில் 8.36 புள்ளிகளுடன் திருப்பூர் 6 -வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. பின்னலாடை நகரம் என பெயர் பெற்ற திருப்பூர் வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சியில் தமிழகத்தில் மட்டுமின்றி உலக அரங்கிலும் 6- வது இடத்தைப் பெற்றுள்ளது.7- வது இடத்தில் ராஜ்கோட் உள்ளது. 



மேலும், 8- வது இடத்தில் திருச்சி 8.29 புள்ளிகளுடனும், சென்னை 9- வது இடத்தில் 8.17 புள்ளிகளுடனும் உள்ளது. விஜயவாடா 10- வது இடத்தைப் பிடித்துள்ளது. உலக அரங்கில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் வளர்ந்த நாடுகளின் நகரங்களைப் பின்னுக்கு தள்ளி முதல் 10 இடங்களையும் இந்திய நகரங்கள் பெற்றிருப்பது அனைத்துத் தரப்பினரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...