நீலகிரி : குன்னூர் - உதகை இடையே இயக்கவிருக்கும் ரயில் பேருந்து, இன்று மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் சோதனை ஓட்டமாக இயக்கப்பட்டது.

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், குன்னூர் - உதகை இடையே ரயில் பேருந்து இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பழைய ரயில் பேருந்து ஒன்று நீலகிரி மலை ரயில் பாதையில் இயக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையுள்ள 32 கிலோ மீட்டர் மலை ரயில் பாதையில் பயணித்து 13 குகைகளுக்குள் புகுந்து வரும்போது எந்த விதமான இடையூறும் இல்லாமல் வருவதை அதிகாரிகள் உறுதி செய்தனர். நாளை (வெள்ளிக்கிழமை) குன்னூரில் இருந்து உதகை செல்லும் இந்த ரயில் பேருந்து, எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் உதகை சென்று அடைந்த பின், இதே மாடலில் திருச்சி பொன்மலையில் புதிய ஒரு ரயில் பேருந்து உருவாக்கப்படவுள்ளது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்ற பின், புதிய இருக்கைகள், புதிய இயந்திரம் மற்றும் புதிய ரயில் பெட்டியுடன் கூடிய ரயில் பேருந்து நீலகிரிக்குக் கொண்டு வந்து, உதகை - குன்னூர் இடையே இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை ஓட்டத்தின் போது தெற்கு ரயில்வே பொறியியல் பிரிவு மூத்த அதிகாரி ரீட்டா சவுத்ரி உடன் பயணித்தார்