கோவை : கோவையில் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நான்கு வாலிபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது :- கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சைமன் கிறிஸ்டோபர் (24), கவுதம் (24), ஜெய்சிங் (29) மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கவாஸ்கான் (24) ஆகியோர் மீது அடிதடி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்கள் தொடர்ந்து இதேபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவின் பேரில், இவர்கள் நால்வரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.