கோவை : கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இந்திய மகளிர் ஒருங்கிணைப்பு நடத்தும் முதலாவது மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கண்காட்சி நாளைத் தொடங்குகிறது.

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் முயற்சியில் 2012 -ம் ஆண்டில் உருவான இந்திய மகளிர் ஒருங்கிணைப்பு, ஜனவரி 2013 -ம் ஆண்டு முறையாகத் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இருந்து வெகுநாளாக திட்டமிடப்பட்ட பெண்களுக்கான முதல் கண்காட்சி நாளைத் தொடங்குகிறது.
இந்தக் கண்காட்சி இந்திய தொழிலகக் கூட்டமைப்பு, இந்திய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி 8 மற்றும் 9 -ம் தேதிகள் வரை நடைபெற உள்ளது.
"முழுக்க பெண்களுக்காகவே நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் பெண்கள், வணிகம், மகளிருக்காக ஒருங்கிணைந்து செயல்படுதல், தொழில் முனைப்பு மற்றும் தலைமை பண்பு ஆகியவை குறித்து கருத்தரங்கில் விதவிதமான அனுபவங்கள் கிடைக்கும். இந்தக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பங்கேற்போருக்கு அனுமதி இலவசம்.
இந்நிகழ்வில், தமிழகத்திலிருந்து 100 -க்கும் மேற்பட்ட தரமான காட்சியாளர்களின் தயாரிப்புகள், சேவைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொருவரும் புதியதாக தொழில் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தையும் தொழில் செய்யும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும் வகையில் நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே கூரையின் கீழ் பல தொழில்களைப் பல ஆயிரம் பேர் பார்த்து பயிற்சி பெற்றுப் பயன்பெறுவதே கண்காட்சியின் சிறப்பாகும்" என்கிறார்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.