கோவை : நீட் தேர்வுக்கு எதிர்ப்பும், ஆதரவும் இருந்து வரும் நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பு குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு கல்வி முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த தகவல்களின் அடிப்படையில் ம.தி.மு.க.வின் மாநில இளைஞர் அணி செயலாளர் வி. ஈஸ்வரன் நமது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளனர். அவற்றை தற்போது காணலாம்.
கேள்வி : தற்போதைய கல்வி முறையை எவ்வாறு கருதுகிறீர்கள்..?
பதில் : பள்ளியை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை, தற்போது பயிற்சி மையங்களை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையாக மாறி வருகிறது. கல்வி என்பது தற்போது வியாபாரமாக உருவாகிவிட்டது. முன்பு மருத்துவக் கல்லூரிகளில் நன்கொடையை நேரடியாக வழங்கி வந்தனர். தற்போது, பயிற்சி மையங்களுக்கு கொடுக்கின்றனர். எனினும், நன்கொடை கலாச்சாரம் மாறவில்லை. கல்வி அனைவருக்கும் ஒரே மாதிரி கிடைப்பதில்லை. கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் முறையான கல்வி இன்றி பாதிக்கப்படுகின்றனர்.

கேள்வி : பயிற்சி மையங்கள் குறித்து உங்களது நிலைப்பாடு என்ன..?
பதில் : மருத்துவக் கல்வியைப் படிக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ள மாணவர்கள் பயிற்சி மையங்களில் கட்டாயம் சேர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒரு மாணவர் தனியார் பயிற்சி மையத்திற்கு ரூ. 5 லட்சம் கட்டணமாக செலுத்துவதாக அறிக்கை கூறுகிறது. அதேபோல, பயிற்சி ஆசிரியர்களும் ஆண்டுக்கு சுமார் ரூ. 60 லட்சம் வருமானமாகப் பெறுகின்றனர். ஆசிரியர்களும் என்.ஐ.டி அல்லது ஐ.ஐ.டி. போன்ற பயிற்சி மையங்களை பரிந்துரை செய்கின்றனர். அதில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை கிடைக்கும் என மாணவர்களிடம் உறுதியளித்து பயிற்சி அளிக்கின்றனர். இதனால், மாணவர்கள் 9-ம் வகுப்பு முதலே பயிற்சி மையங்களை தேடி செல்கின்றனர்.
கேள்வி : கல்வி முறையில் நேர்மறையான மாற்றம் என்ன என்பதை நீங்கள் நினைக்கிறீர்கள்..?
பதில் : மாநில பாடத்திட்டங்களைக் கொண்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மெதுவாகத் தான் பாடத்தை புரிந்து கொள்கின்றனர். எனவே, இந்த முறையை மாற்ற வேண்டும். அதுபோக, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி மற்றும் அடிப்படை அறிவை புகுத்தி, பாடங்களை பயில வைக்க வேண்டும். அதோடு, மாணவர்களுக்கு உடற்கல்வி தொடர்பான பாடங்களையும் புகட்ட வேண்டும்.

கேள்வி :நீட் தேர்வின் தாக்கம் குறித்த உங்களது பார்வை என்ன..?
பதில் : சட்டவிரோதமான மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டு வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை சீர்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டதே 'நீட்'. தகுதி வாய்ந்த மாணவர்களே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பை மத்திய அரசு ஏற்படுத்தி தருகிறது. மேலும், அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு நீட் தேர்வை எழுதி வெற்றி பெற்று, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவது மிகவும் போராட்டமாக இருக்கிறது. மத்திய அரசின் சார்பில் 400 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், இதில், சிறந்த ஆலோசகர்கள் பணியமர்த்தப்படவில்லை.
தனியார் பயிற்சி மையங்கள் மாணவர்களுக்கு நாள்தோறும் வகுப்புகளை எடுக்கின்றன. ஆனால், அரசு மையங்களில் வாரக் கடைசி நாட்கள் மட்டுமே பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் காரணமாகவே, தனியார் மற்றும் அரசு பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்களின் எதிர்காலம் வேறுபடுகிறது. மேலும், அரசு மையங்களில் முழுமையான பயிற்சியாளர்கள் இல்லாததும் மாணவர்களிடையே பெரும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
நீட் தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன்பு 99 சதவீதம் மாநில அரசு பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஒருசில மாணவர்கள் அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தனியார் கல்லூரியில் சேர்ந்து மருத்துவம் படித்து வந்தனர். சி.பி.எஸ்.இ.,யில் பயின்ற 3,488 மாணவர்களில் 4 அல்லது 5 பேர் மட்டுமே அரசு கல்லூரிகளில் சேர்ந்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆராய்ந்து பார்த்த போது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது, தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பயிற்சி மையங்களுடன் ஒப்பந்தம் போட்டு கொள்கின்றன. ஏனெனில், ஆசிரியர்களுக்கு நீட் பாடத்திட்டத்தை பள்ளி ஆசிரியர்களால் கையாள முடியாததே காரணம். தேர்வு முறையைப் படிப்படியாக மாற்றம் செய்ய வேண்டும். பாடங்களின் முழு அர்த்தத்தையும் மாணவர்களுக்குப் புரியும்படி ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். சமமான கல்வியை பெறுவதற்கான உரிமை அனைத்து மாணவர்களுக்கும் உண்டு. தேர்வுகளுக்கு ஏற்றபடி மாணவர்களை தயார் செய்வது ஆசிரியர்களின் கடமையாகும்.
கடந்த ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி, சுமார் 9 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதியுள்ளனர். இதில், 4.2 லட்சம் மாணவர்கள் அறிவியல் பாடங்களைப் படித்தவர்கள். 3.5 லட்சம் மாணவர்கள் மாநில அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். நீட் தேர்வை எழுதிய இந்த மாணவர்களில் வெறும் 4 பேர் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், ஒரேயொரு மாணவன் தனியார் கல்லூரியிலும் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது. அதேபோல, சி.பி.எஸ்.இ. பள்ளியைச் சேர்ந்த 5,000 மாணவர்களில், 864 பேர் தனியார் மருத்துவமனைக் கல்லூரிகளில் சீட் கிடைத்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மொத்தம் 1,834 மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

கடந்த ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த 1,277 மாணவர்கள் ஒரு ஆண்டுகளாக நீட் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றனர். அவர்களில் 557 பேர் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். 3,456 மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், மாணவர்கள் பள்ளிப் படிப்புடன் சேர்ந்து பயிற்சி பெறுவதைவிட, நீட் பயிற்சியை தொடர்ந்து பெற்றால் நல்ல மதிப்பெண்கள் பெறுவது தெளிவாகியுள்ளது.
சி.பி.எஸ்.இ. பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் 611 பேர் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 283 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் என மொத்தம் 894 பேர் மருத்துவப் படிப்பை பயின்று வருகின்றனர். அதில், ராஜஸ்தான், ஆந்திரபிரதேசம், தெலுங்கானா போன்ற மாநில பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 261 பேர் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் பணம் செலுத்தி சேர்ந்துள்ளனர், இவ்வாறு கூறினார்.
இந்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி கிடைத்த தகவலின் மூலம், மருத்துவப் படிப்பை தேர்வு செய்யும் மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது பள்ளி கல்வியை மீறி, பயிற்சி மையங்கள்தான் என தெரிகிறது.