"தடாகம் பகுதியில் உலா வரும் யானைகளை சிறை பிடிப்பது சரியான நடவடிக்கை அல்ல"

கோவை : தொடரும் மனித- யானை மோதல்களைத் தடுத்து நிறுத்த யானைகளை வனத்திற்குள்ளே இருக்கப் பழக்கும் முறைதான் சிறந்ததாக இருக்கும் என்கிறார் அஜய் தேசாய்.

கோவை : தொடரும் மனித- யானை மோதல்களைத் தடுத்து நிறுத்த யானைகளை வனத்திற்குள்ளே இருக்கப் பழக்கும் முறைதான் சிறந்ததாக இருக்கும் என்கிறார் அஜய் தேசாய்.

தடாகத்தில் தொடரும் காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் பணியினை வனத்துறை அதிகாரிகள் விஞ்ஞான ரீதியில் திட்டமிட்டு நிதானமாக அணுகி கொண்டிருப்பதைப் பார்வையிட காட்டுயானைகளை விரட்டுவதில் முன்அனுபவமுள்ள அஜய் தேசாய் கடந்த திங்கள் மற்றும் செய்வாய் கிழமைகளில் சம்பவ இடத்திற்கு வந்திருந்தார்.

ஆசிய யானை நிபுணர்களின் உறுப்பினர் மற்றும் இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் ஆலோசகராக இருக்கும் அஜய் தேசாய் காட்டுயானைகளை அப்புறப்படுத்துவது குறித்து கூறுகையில், "இங்கிருந்து யானைகளைத் தற்காலிகமாக அனுப்புவதோ அல்லது தடுத்து நிறுத்துவதோ தீர்வல்ல. எதிர்மறை முறையினால் இரண்டு யானைகளையும் வனத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

பெரும்பாலும் வனத்திலிருந்து யானைகள் இரை தேடி வருவதை முதன்மைக் காரணமாக கொண்டுள்ளதால் வனத்திலே அதனை வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, காடுகளுக்கு வெளியே தடுப்பு அமைக்க வேண்டும். யானைகளைப் பிடித்து அடைத்து வைக்காமல், அதனுடைய தேவைகளை காட்டிலே நிறைவேற்றிக் கொள்ளும் திறனை வளர்த்துவிட வேண்டும்.

மேலும், கும்கி யானைகளைவிடக் காட்டு யானைகள் அதிகம் பலம் வாய்ந்தவை. ஆதலால், அவை சண்டைப் போட தொடங்கினால் முடிக்கும் வரை ஓயாது. எனவே, கும்கி யானைகள் காட்டு யானைகளோடு சண்டையிடும் போது அதிக பயிற்சிகளோடு சண்டைக்குத் தயாராக வேண்டும். ஏனென்றால், இங்குள்ள அனைத்துக் கும்கி யானைகளை விடவும், காட்டுயானையின் எடை அதிகம். இரண்டு யானைகளில் ஒன்றான விநாயத்தின் எடை சுமார் 4.5 டன்னுக்கும் அதிகமானது," என்கிறார்.


வனத்துறை அதிகாரிகள் விநாயகத்தைப் பிடிக்க அதனைவிடவும் பெரிய கும்கியை கொண்டு வரத் திட்டமிடுகின்றனர். இருந்த போதிலும் அதில் பல்வேறு சிக்கல் இருப்பதாகக் கூறும் அஜய் தேசாய், "இந்த முழு சூழ்நிலையையும் கையாளுவதில் பல சவால்கள் நிறைந்துள்ளன. அவற்றில் கும்கியும், காட்டு யானையும் சண்டையிட வசதியில்லாத நிலப்பரப்பு, கும்கி யானைக்கும், பாகனுக்கும் போதிய பயிற்சி இல்லை போன்ற சவால்கள் முக்கியமானவை.

வழக்கமாக ஆண் யானைகள் தலைமையில் இருப்பவர்களை பின்தொடரும் பழக்கம் கொண்டவை. இதை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டால் மனித விலங்கு மோதல்களைக் குறைக்கலாம். அதற்கு முதலில் விநாயகத்தின் குணத்தை மாற்ற முயல வேண்டும். இதுவே சின்னதம்பி போன்ற சின்ன யானைகளை வழிக்கு கொண்டு வர உதவும். மேலும், ஆண் யானைகள் பெண் யானைகளைவிட எண்ணிக்கையில் குறைவாக உள்ள காரணத்தால் அவற்றை பிடித்துக் கொண்டு போவதைக் காட்டிலும் வனத்திற்கு அனுப்பி வைப்பதே சரியாக இருக்கும்" என்கிறார், அஜய் தேசாய்

மேலும் பேசிய அவர், "தடாகம் பகுதியில் நடைபெறும் இந்த முயற்சி சிக்கலானது தான். மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் இருவரின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். யானைகள் மனித வாழிடங்களுக்குள் வந்து அச்சுறுத்துவது மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, இந்த இக்கட்டான சூழலில் செய்ய வேண்டியது யானைகளின் மனநிலையை மாற்றுவதே. அவற்றை வனங்களுக்கு அனுப்பி அங்கு அதனுடைய பிழைப்புத் திறனை அதிகப்படுத்த வேண்டும். இதற்காக, அரசு அதிகளவில் நிதியளித்து வன ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும். அதை விடுத்துக் காட்டு யானைகளை கூண்டில் அடைத்து பிடித்துச் செல்வதும், வேறு காட்டுப்பகுதிக்கு இடம்பெயர்ப்பதும் தீர்வாகாது," என்கிறார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...