ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைப்பு : மேம்பாலக் கட்டுமானப் பணிக்காக மேலும் ரூ. 117 கோடி ஒதுக்கீடு

கோவை : கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகளுக்காக மேலும் ரூ. 117 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை - பொள்ளாச்சி சாலையில் உள்ள ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி நெடுஞ்சாலைத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகளுக்காக மேலும் ரூ. 117 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக ஆத்துப்பாலம் அருகே உள்ள எல்&டி சுங்கச் சாவடியை கடந்த 3-ம் தேதி தமிழக அரசு மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்தது. இதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் தங்கராஜிடம் வழங்கினார்.

இதனிடையே, மேம்பால பணிக்காக ஒரு ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாநில நெடுஞ்சாலை துறை தகவல் தெரிவித்துள்ளது. கோவையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை உள்ளது. இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரூ. 216 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

சுமார் 1.95 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, ஆத்துப்பாலம் சுங்கச்சாவடி அருகே கரும்புக்கடை பகுதியில் இருந்து தொடங்கி உக்கடம் - செல்வபுரம் புறவழிச்சாலையில் திரும்பும் வகையில் அமைக்கப்படவுள்ளது. மேம்பாலத்தில் 55 தூண்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக, ரூ. 131 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக, உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை ஒரு ஹெக்டர் நிலம் கையகப்படுத்த உள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முதற்கட்டமாக உக்கடம் பேருந்து நிலையம் முதல் கரும்புக்கடை வரை மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, கரும்புக் கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரையிலும் பணி தொடங்கப்பட உள்ளது. இதற்காக, மேலும் ரூ. 117 கோடி தமிழக அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது," என்றார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...