டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரம் : வரும் 13-ம் தேதிக்குள் பதிலளிக்க சி.பி.ஐ.க்கு உத்தரவு

கோவை : டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் மீது ஆட்சேபனை தாக்கல் செய்துள்ள நிலையில், வரும் 13-ம் தேதிக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை : டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் மீது ஆட்சேபனை தாக்கல் செய்துள்ள நிலையில், வரும் 13-ம் தேதிக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். உயரதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. தனிப்பட்ட காரணங்களினால் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாகவும், குற்றவாளிகள் யாரும் இல்லை என்பதால் இவ்வழக்கை கைவிடுவது எனவும் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக்கூறி விஷ்ணுபிரியா தந்தை ரவி ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார்.

இது தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி நடராஜன், வழக்கு விசாரணையை வருகின்ற 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், அன்றைய தினம் சி.பி.ஐ. தனது நிலைப்பாட்டை விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.

இதனிடையே, விஷ்ணுபிரியா என்ன காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டார் என்பதை சி.பி.ஐ. கண்டறியவில்லை. முறையாக சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை. காவல் துணை ஆணையர் மகேஸ்வரி, காவல் ஆய்வாளர் சந்திரகலா, துணை ஆணையர் இனிகோ திவ்யன் உள்ளிட்ட 7 பேரிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என ரவி தரப்பு வழக்கறிஞர் அருள்மொழி நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...