திருப்பூர் : குடியிருப்பு பகுதியில் குப்பைகளை பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் : குடியிருப்பு பகுதியில் குப்பைகளை பிரித்தெடுக்கும் திடக்கழிவு மேலாண்மை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2-வது வார்டு ஆத்துப்பாளையம் பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் மாநகர பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஆத்துப்பாளையம் பகுதியில் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதை அறிந்த அப்பகுதியினர் மாநகராட்சியிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மக்கள் எதிர்ப்பையும் மீறி நேற்றைய தினம் அப்பகுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, குழந்தைகளுக்கு சுகாதார சீர்கேடு நிலவும் என்பதால், திடக்கழிவு மேலாண்மை அமைக்கும் பணியினை கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.