நீலகிரி : பாபர் மசூதி இடிப்பு தினத்யொட்டி நீலகிரி ரயில் நிலையங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வுப் பணிகளை இன்று மேற்கொண்டனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் காவல்துறை சார்பில், இன்று பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் நீலகிரி மலை ரயில் நிலையத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும், சுற்றுலாப்பயணிகள் என்ற அடையாளத்துடன் சமூக விரோதிகள் நீலகிரிக்குள் புகுந்து விடாமல் தடுத்து நிறுத்தவும் போலீசார் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு குன்னூர், உதகை போன்ற மலைரயில் பாதையில் சோதனை மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து மலை ரயிலில் பயணிக்க வட மற்றும் தென் மாநிலங்களில் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவார்கள் என்பதால் இச்சோதனை மேற்கொண்டதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.