திருப்பூர் : கஜா புயலின் தாக்கத்தால் சேதமடைந்த உடுமலை - மூணாறு நெடுஞ்சாலை, பெரியவாரை ஆற்றுப்பாலத்தை மீண்டும் ரூ.50 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணியைத் துரிதப்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர், உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் வழியில், மூணாறிலிருந்து 3 கி.மீ தூரத்தில் பெரியவாரை ஆற்றுபாலம் அமைந்துள்ளது. இது பல வருடங்களுக்கு முன்னதாக ஆங்கிலேயா்களால் கட்டப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த கனமழையில் கன்னி ஆற்றின் குறுக்கே பெரியவாரையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த காங்கிரீட் ஆற்றுப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு சேதமடைந்தது.
இதனால் மூணாரிலிருந்து மறையூர், உடுமலை, கோவை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. எனவே, தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்குச் செல்லும் காய்கறிகள், பல சரக்கு வண்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வானங்கள் என அனைத்தும் முடங்கின. பின்னர் கேரள அரசு போர்க்கால அடிப்படையில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தற்காலிக தரைமட்ட பாலம் அமைத்துக் கொடுத்தது.
இந்தப் பாலத்தில் சிறிய ரக வாகனங்கள், பேருந்துகள் மட்டுமே செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பாலத்தின் நலன் கருதி கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், கஜா புயலின் காரணமாக கேரளாவில் பெய்த கனமழையில் பெரியவாரை பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் தடம் தெரியாமல் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் தமிழகத்திலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்பட்டன. மறுபடியும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்களும், வியாபாரிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இரண்டாவது முறையாக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கிய கேரளா அரசு, தற்காலிக பாலத்தை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாலத்தைச் சீரமைக்கும் பணி இன்னும் ஒருவாரத்தில் நிறைவடைந்து, தமிழக- கேரள போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.