திருப்பூர் : காங்கயம் பகுதிகளில் பரவிவரும் கோமாரி நோயால் 30 மாடுகள் இறந்த நிலையில், அவைகளுக்கு இழப்பீடும், மேலும் பரவாமல் தடுக்க கால்நடைத்துறையில் தரமான ஊசி மருந்துகளையும் பயன்படுத்த கோரியும் விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர், காங்கயம் தாலுகாவில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. கூடுதல் வருமானத்திற்காக விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து பால் உற்பத்தி மூலம் கணிசமாக வருமானம் ஈட்டி வருகிறன்றனர். இந்நிலையில், தற்போது மாடுகளுக்குக் கோமாரி நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால் அடுத்தடுத்து கால்நடைகள் பாதிப்படைகின்றன.

நத்தக்காடையூர், குட்டப்பாளையம், சாவடிப்பாளையம், பரஞ்சேர்வழி ஆகிய கிராமங்களில் நோய்தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிற நிலையில், இதுவரையிலும் அங்கு 30 -க்கும் மேற்பட்ட மாடுகள் இந்நோய் தாக்குதலால் இறந்துள்ளன. மேலும், கால்நடைத்துறை மூலம் தடுப்பு ஊசி போடப்பட்டும் நோய்தாக்குதல் குறையவில்லை என்பது மிகுந்த வருத்தமளிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
ஈரோட்டில் கோமாரி நோய் தாக்கி இறந்த மாடுகளை கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் கொண்டு வந்து வீசிச் செல்வதால், தண்ணீரின் மூலம் காங்கயம் பகுதியில் பல கிராமங்களில் வாய்க்காலை ஒட்டி அமைந்துள்ள விவசாயிகளின் கால்நடைகள் அதிகளவில் நோய் தாக்குதலுக்கு உட்பட்டு இறந்து வருவது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இந்நோய் தாக்குதலால் மாடுகளுக்கு நாக்கு, கால் குளம்பு, கொம்புகளில் புண் ஏற்பட்டு 10 நாட்களுக்கு மேலாக தீவனம் எடுக்காமல், செத்து மடிகின்றன. தோட்டங்களிலுள்ள மற்ற மாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. எனவே, கால்நடைத்துறை மூலம் தரமான ஊசி மருந்துகளை பயன்படுத்தி விரைவில் இந்நோயை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும், கோமாரி நோய் தாக்கி இறந்த மாடுகளுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் விவசாயிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.