கோவை, : வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்ட அமைக்கப்பட்ட வரப்பாளையம் முகாம் பெரியதடாகம் பகுதிக்கு மாற்றப்பட்டது.
கோவை : வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் புகுந்த காட்டுயானைகளை விரட்ட அமைக்கப்பட்ட வரப்பாளையம் முகாம் பெரியதடாகம் பகுதிக்கு மாற்றப்பட்டது.
கோவை, தடாகம் பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வந்து போவது வாடிக்கையாகிவிட்டது. இருந்தாலும், விவசாயிகளுக்கு அவை ஏற்படுத்தும் சேதங்களை வாடிக்கையாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. அதனால் வனத்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு மேலாகக் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக பொம்மன், விஜய், சேரன் என்ற ஆகிய 3 யானைகள் பெரியதடாகம், அனுவாவி சுப்ரமணியார் கோயில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டன.
நேற்று இந்த மூன்று யானைகளும் இணைந்து சின்னதம்பி என்ற பெயருடைய காட்டுயானையை மடக்கிப் பிடித்தன. தற்போது ஒரு காட்டுயானையும், 3 கும்கியும் பெரியதடாகம் முகாமிற்கு மாற்றப்படுகின்றன. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் விநாயகம் என்ற யானை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இடம்பெயர்ந்துள்ளது. இரண்டு யானைகளையும் வனத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் முதுமலையில் இருந்து அதிகளவில் கும்கிகளை இறக்கி விரைந்து மக்களின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர். மேலும், காட்டுயானைகளைப் பிடிப்பதில் அனுபவமுள்ள வனத்துறை அதிகாரி அஜய் தேசாய் காட்டுயானைகள் சேதப்படுத்திய இடங்களைக் கடந்த இரண்டு நாட்களாகப் பார்வையிட்டு, மேலதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.