கோவை : வனவிலங்கு பாதுகாப்பு குறித்து தனது படைப்புகளின் மூலம் விழிப்புணர்வை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த இளம் ஓவியரும், எதிர்கால வன புகைப்படக்காரருமான லெனின் ஏற்படுத்தி வருகிறார்.

'கண் பார்க்கிறது, ஸ்கெட்ச் பேசுகிறது' என்கிறார் 21 வயது இளம் ஓவியரும், எதிர்கால வன புகைப்படக்காரருமான லெனின். இவர், பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.டபுள்யூ. படிப்பை பயின்று வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாகப் பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை படம் பிடிப்பது, ஓவியங்களாக வரைவது உள்ளிட்டவை செய்துள்ளார். தற்போது, அவர் வனவிலங்கு பாதுகாப்பு குறித்து தனது படைப்புகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஓவியர் லெனின் தனது படைப்பாற்றல் குறித்து சிம்ப்ளிசிட்டியிடம் பகிர்ந்துள்ளார். இளமை பருவத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட அவர், இந்தியன் பறவைகள் மற்றும் வனவிலங்குகளை அதிகளவில் வரைந்துள்ளார். மேலும், எதிர்பாராத பகுதிகளில் கண்ணில் தென்படுவதை மனதில் வைத்து, அதனை ஓவியமாக ஆக்கும் திறமையை அவர் கொண்டுள்ளார். குறிப்பாக, தற்போது வனவிலங்குகள் தொடர்பான ஓவியங்களை வரைய ஆரம்பித்தவுடன் பொதுமக்களுடன் லெனினுக்கு அதிக தொடர்பு ஏற்பட்டுள்ளது.

"வர்ணம் தீட்டுவதற்கு முன்பாக வரைய இருக்கும் பொருள் மீது கண்களால் முதலில் கவனம் செலுத்துவேன். பின்னர், யதார்த்த வேலைப்பாடுகள் மூலம் கலைக்கு உயிரூட்டுவேன். தற்போது வனவிலங்குகள் பற்றிய ஓவியங்களை வரைந்து வருகிறேன். இந்தியன் பறவைகள், வனவிலங்குகளை வரைவதன் மூலம் வனவிலங்கு பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைத்து வருகிறேன்," என்கிறார் ஓவியர் லெனின்.

அதேபோல, உலகளவில் புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்களின் உருவங்களையும் அவர் தனது ஓவியத்தின் மூலம் சிற்பம் வடித்துள்ளார்.
"தனிச்சிறப்பு வாய்ந்த ஓவியங்களை பார்க்கும் போது இயற்கையுடன் ஒன்றியே இருக்கும். நான் வரையும் பறவைகள் மற்றும் விலங்குகள் போன்ற ஓவியங்கள் பல இயற்கை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், சிறந்த படைப்புகளை பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. வன பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை யதார்த்தமான படைப்புகளாக உள்ளது," இவ்வாறு கூறினார் லெனின்.

லெனின் வரைந்த இந்தியன் பறவைகளின் சிறந்த புகைப்படங்கள் கடந்த டிச.,1-ம் தேதி ராஜபாளையத்தில் நடந்த தமிழக பறவையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.