கோவையில் பன்றிக்காய்ச்சலால் தொடர் மரணம் : மனித உயிர்கள் மலிவானதா..? என முன்னாள் எம்.பி. கண்டனம்

கோவை : கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மனித உயிர்கள் மலிவானதா..? என முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மனித உயிர்கள் மலிவானதா..? என முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 83 பேர் பலியாகியாகியுள்ளனர். இந்த நிலையில், உடனயாக மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- கோவை அரசு மருத்துவமனையில் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சலின் காரணமாக இதுவரை 80-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இது கோவை மாவட்ட மக்களை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இக்காய்ச்சலின் காரணமாக அன்றாடம் இரண்டு அல்லது மூன்று பேர் என தொடர் மரணம் நிகழ்ந்து வருவது கவலையளிக்கிறது.

அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் மரணம் ஏற்படுகிறதா..?. இக்காய்ச்சலின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முடிந்தவரை பணத்தை கறந்துவிட்டு முடியாத நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் நிகழ்கிறதா..? என்பது இதுவரை புலப்படாத மர்மாமாகவே உள்ளது. எதுவாகிலும் மனித உயிர்கள் மலிவாக பலியாவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

அரசு மருத்துவமனையில் இக்காய்ச்சலினால் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தீவிரமான சிறப்பு சிகிச்சை அளிப்பதும், தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதை தீவிரமாக கண்காணித்து தணிக்கை செய்ய வேண்டும். டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். 

மேலும், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம், மாநகர நிர்வாகம் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கொசு மருந்து தெளிப்பது மட்டுமே தீர்வு என நினைக்காமல் குடியிருப்பு பகுதியில் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய சிகிச்சையளிக்க மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தோடு இணைந்து பணியாற்ற வேண்டும்.

சாதாரண ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்கு அரசு மருத்துவமனைதான் நம்பிக்கை என்கிற நிலையில், தொடர் மரண பீதியால் இம்மக்களுக்கு நம்பிக்கையற்று போகிற அபாயம் உள்ளது. மாநில அரசு உடனடியாக போதிய வசதிகளை கோவை அரசு மருத்துவமனைக்கு ஏற்படுத்தி தர வேண்டும், இவ்வாறு அவர் கேட்டு கொண்டார். 

Newsletter

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...