ஈரோடு : 4 நாட்கள் நடக்கும் 'வீவ்ஸ்' ஜவுளிக் கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்கியது.

இந்திய தொழிற்சாலை கூட்டமைப்பு மற்றும் டெக்ஸ்வேலி இணைந்து நடத்தும் இந்தக் கண்காட்சி ஜவுளி விற்பனை அரங்கில் இன்று முதல் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில், சுமார் 250-க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்தக் கண்காட்சியில் நுகர்வோர் - விற்பனையாளர்களின் மூலம் ரூ.800 கோடி வருமானம் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 6,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் 'டைட்டன்ஸ் ஆப் தமிழ்நாடு டெக்ஸ்டைல்ஸ்' என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. இதில், ஜவுளித்துறையில் வெற்றியடைந்த 28 தொழில்முனைவோர்களை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் சி.ஐ.ஐ. தெற்கு பிராந்தியத்தின் துணை தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு பேசுகையில், "நெசவு தொழிலில் உயர்ந்த நிலையை அடைவதற்கு திறன் மேம்பாடு, தொழில்நுட்பத்துடன் ஈடுபடுத்துதல், உலகளாவிய வர்த்தக நடைமுறைகள் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியாக புதிய டிசைன்கள் புகுத்துவதன் மூலம் ஜவுளித்துறை மேம்படும்," இவ்வாறு அவர் கூறினார்.